தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போம் – பொதுபலசேனா

” நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா ?தமிழர்களுக்கான தீர்வு திட்டம் என்னவென்பதை சிங்கள தலைவர்கள் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.” –
என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” அன்று முதல் இன்றுவரை தேர்தல் காலங்களில் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி கதைக்கப்படுவது வழமையாகிவிட்டது.

இந்தநாட்டில் வாழும்  தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு  வழங்கப்படவேண்டும் என்ற யோசனையை நாம் முன்மொழிகின்றோம்.

இந்த நாட்டை இதுவரையில் சிங்கள தலைவர்களே நிர்வகித்துள்ளனர். ஆனாலும், அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டுவந்தனர். எனவே, இந்நிலைமைக்கு சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூறவேண்டும்.

அதேவேளை,  13, 13 பிளஸ் என்பதெல்லாம் முக்கியம் அல்ல. தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான பேச்சுகளை ஆரம்பித்து, இதோ, இந்த தீர்வைதான் தம்மால் வழங்கமுடியும் என்பதை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். நிர்வாகத்தை வழங்கவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்தவேண்டும்.

எத்தனை வருடங்கள் இதற்கான பேச்சுகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன? இதனால் சாதாரண தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றனர். அதிகாரத்தைகோரும் தமிழ் அரசியல்வாதிகளோ,  கொழும்பு வந்துசென்று – சொகுசாக வாழ்கின்றனர்.  எனவே, சாதாரண மக்கள் பக்கம் நின்றே இப்பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும். இதற்காக நாமும் குரல் எழுப்புவோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles