அக்கரப்பத்தனையில் குளவிக்கொட்டு – 35 பேர் பாதிப்பு!

அக்கரப்பத்தனை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் 35 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஊட்டுவள்ள பிளேமோர் பிரிவில், தேயிலை மலை இலக்கம் 8, மலை இலக்கம் 3 ஆகியவற்றில்  கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள்மீது கலைந்துவந்த குளவிகள் சரமாரியாகக் கொண்டியுள்ளன.

குளவி தாக்குதலுக்கு இலக்காகி பாதிக்கப்பட்ட 30 பெண் தொழிலாளர்களும், 05 ஆண் தொழிலாளர்களுமே அக்கரபத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்காணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles