ஐ.பி.எல்லில் அதிரடி காட்டிய பெதும்!

ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் பெதும் நிஸ்ஸங்க, 33 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை அவர் விளாசித்தள்ளினார்.

ஐபிஎல் 2026 தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (4) மற்றும் யஷஸ்வி ஜெய்சவால் (6) ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

எனினும், அணித் தலைவர் ரியான் பராக் (90 ஓட்டங்கள், 50 பந்துகள்) மற்றும் துருவ் ஜூரெல் (42) ஜோடி 102 ஓட்டங்களைப் பெற்று அணியை மீட்டனர்.

இறுதி நேரத்தில் டோனோவன் பெரைரா வெறும் 14 பந்துகளில் 47 ஓட்டங்கள் (6 சிக்ஸர்கள்) விளாச, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ஓட்டங்களைப் பெற்றது.

226 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் பெதும் நிஸங்க ஜோடி அசுர வேகத் தொடக்கம் அளித்தது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவர்களில் 110 ஓட்டங்களை சேர்த்தது. பெதும் நிஸங்க 33 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் கே.எல். ராகுல் 40 பந்துகளில் 75 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) குவித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.

நடுவரிசையில் நிதிஷ் ராணா (33) அதிரடி காட்ட, கடைசி ஓவர்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (18) மற்றும் அசுதோஷ் சர்மா (25) ஜோடி நிதானமாக விளையாடி இலக்கை எட்டினர்.

டெல்லி அணி 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles