Breaking News : 22ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் – சரத் வீரசேகர மட்டுமே எதிர்ப்பு!

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொட்டு கட்சி எம்.பியான சரத் வீரசேகர மட்டுமே எதிர்த்து வாக்களித்தார்.

19 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராகவும் சரத் வீரசேகர வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

22 மீது நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் 22 ஐ ஆதரித்து வாக்களித்தன.

Related Articles

Latest Articles