BRI மாநாட்டில் பங்கேற்க விமல் சீனா பயணம்!

சர்வதேச ஒத்துழைப்புக்கான Belt & Road மாநாட்டில் பங்கேற்பதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சீனா செல்கின்றார்.

ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள இம்மாநாடு, சீன அரசு நடத்தும் இரண்டு முக்கிய இராஜதந்திர மாநாடுகளில் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜீன ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு சீனா நோக்கி புறப்பட்டார்.

Related Articles

Latest Articles