கம்பளை, கீரப்பனை பகுதியில் இடம்பெற்ற க#த்#தி#க்#குத்துத் தா#க்#குதலில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தனது மாமாவையே மருமகன் இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்றும், தாக்குதலை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய சந்தேகநபரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
க. யோகா
