நேபாளத்துக்கு 1 மில்லியன் டொலர்களை அன்பளிப்பாக வழங்க அமைச்சரவை அனுமதி

கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் நிவாரணப் பணிகளைச் செயற்படுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் இதற்குரிய யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு நேபாளத்தில் றசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ள நிலைமையால் அதிகமானவர்கள் உயிரிழந்து அதிகளவான சொத்துக்களும் அழிவடைந்துள்ளன.

இவ் இடர் நிலைமையின் மோசமான தன்மையால் நேபாள அரசுக்கும் மற்றும் மக்களுக்கு குறிப்பிடத்தக்களவு மனிதாபிமான சுமை ஏற்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளல், தொடர்ந்தும் வெள்ளம் ஏற்படும் அபாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றமை போன்ற காரணங்களால் நிவாரணங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு ஆதரவுகளை துரிதமாக வழங்க வேண்டியுள்ளது.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் காணப்படுகின்ற ஆழமான கலாச்சார, சமய மற்றும் பரஸ்பர வெகுசனத் தொடர்புகளின் அடிப்படையில் நீண்டகால நட்புகள் மற்றும் மோசமான இயற்கை அனர்த்தத்தால் இடம்பெற்ற மோசமான மனிதாபிமான மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் தொடர்பாக இலங்கையின் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசால் நேபாள அரசுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles