செம்மணி புதைகுழி: 500 ஐ நெருங்கியது!

யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 45ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 05 மனித எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இதையடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 494 ஆக உயர்ந்துள்ளது.

Related Articles

Latest Articles