செம்மணி மனிதப் புதைகுழி: 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அகழ்வுப் பணிகளின் ஆரம்பக் கட்டமாக, புதைகுழி வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றி நிலத்தைத் துப்பரவு செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னதாக இரண்டு கட்டடங்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

முதலாம் கட்டத்தின்போது 9 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

இரண்டாம் கட்டத்தின்போது 45 நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி, 54 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது, தடயவியல் அகழ்வாய்வுத் தளங்கள் 1 மற்றும் 2 ஆகியவற்றிலிருந்து மொத்தமாக 240 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 239 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மூலம் மேலதிக தடயங்கள் மற்றும் சான்றுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles