தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதல்வர்

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (செப். 28) முறைப்படி தொடங்கி வைத்தார்.

மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை வளாகமும் விழாக்க கோலம் பூண்டிருந்தது.

முதல்கட்டமாக மும்மதங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

விழாவில் பயனடைந்த தாய்மார்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய், பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க பல குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

அப்போது உணர்ச்சிப் பெருக்கால் அழுத தாய் ஒருவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய அவர், பயனாளிகளான தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுடன் ‘செல்பி’ புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அருண் ராஜ், “இத்திட்டத்திற்காக முதல்கட்டமாக 1,28,499 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிரசவித்து வீடு திரும்பும்போதே குழந்தைகளுக்கு இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles