தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து, பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) , எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவகலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் , தமது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆற்றிய பங்களிப்பிற்காகத் தமது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், இரு தரப்பினரும் நீண்டகால இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, வர்த்தகம், அபிவிருத்தி உதவிகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சீனத் தூதர் கி சென்ஹாங்கின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தினார்.
