400 பேரடங்கிய குழுவுடன் இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு அவர் வருகை தந்தால், அது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் விஜயமாக அமைவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சுமுகமான மாற்றத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகவும் பார்க்கப்படும்.

எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்தியா பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துகிறது.

2020 ஆம் ஆண்டு எல்லை மோதலுக்குப் பின்னர் பெய்ஜிங் மற்றும் டெல்லி இடையிலான உறவைச் சீரமைக்க எடுக்கப்படும் முயற்சிகளின் அடையாளமாகவே ஜி ஜின்பிங்கின் இந்த வருகை உற்றுநோக்கப்படுகிறது.

சீன அதிகாரிகள் ஹோட்டல்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக இந்திய மூலாதாரங்கள் தெரிவித்துள்ளன.

இம்முறை சீன ஜனாதிபதியுடன் சுமார் 400 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகை தரவுள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜயத்தின் போது 200 க்கும் குறைவான அதிகாரிகளே வருகை தந்திருந்தனர்.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சீனாவுக்கு விஜயம் செய்தார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மெதுவாகவே சீரடைந்து வருகிறது.

சமீபத்தில் கூட எல்லை தொடர்பான புதிய தகராறு இரு தரப்பிற்கும் இடையே ராஜதந்திர ரீதியிலான காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த உச்சிமாநாட்டின் போது, நீண்டகாலமாக இருந்து வரும் எல்லைத் தகராறுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கையாண்டு, இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை இருநாட்டு அதிகாரிகளும் ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஜி ஜின்பிங்கின் இறுதி பயணத் திட்டங்கள் மற்றும் இந்திய-சீன இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரல் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “BRICS கூட்டமைப்பின் ஒத்துழைப்பிற்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதுடன் தீவிரமாகப் பங்கேற்கிறது. இம்முறை தலைமையை ஏற்றுள்ள இந்தியா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு சீனா ஆதரவளிக்கும்” எனக் கூறியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles