நாடாளுமன்ற உறுபு;பினர் ஹரீன் பெர்னாண்டோ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், இன்று காலை ஹரீன் எம்.பி. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றார்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.