திருமண வைபத்தில் மோதல்: கொட்டகலையில் பெரும் பதற்றம்

கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டகலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வின்போது மதுபோதையில் இருந்த இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு விரைந்த திம்புள்ள பத்தனை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர்.

எனினும், கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிலர் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,

பொலிஸ் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பொலிஸார்மீது தாக்குதல் நடத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு பொலிஸ் அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏனைய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் திம்புல்ல – பத்தனை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் கொட்டகலை நகரில் பெரும் பதற்றமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles