இனப்பிரச்சினைக்கு சமஷ்டியே தீர்வு! – கனடா தூதுவரிடம் சாணக்கியன் எம்.பி. திட்டவட்டம்


இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை அண்மையில் தனிப்பட்ட முறையில் சந்தித்து மேற்கொண்ட விரிவான கலந்துரையாடலின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் விரிவாக எடுத்துரைத்தார்.

குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தொடரும் நில அபகரிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறாமை போன்ற விடயங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் தொடர்வதை அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

வேலைவாய்ப்புப் பற்றாக்குறை, முதலீடுகள் இல்லாமை மற்றும் போருக்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகள் முழுமையடையாத நிலை ஆகியவை அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளன என்பதை அவர் விளக்கினார்.

பல்வேறு இன, மொழி மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மையைக் கொண்ட கனடா போன்ற நாடுகள், சமஷ்டி ஆட்சிமுறையின் ஊடாக அதிகாரப் பங்கீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய சாணக்கியன், அந்த அனுபவங்கள் இலங்கைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் நிலையான அமைதியை எட்டுவதற்கு நீதி, பொறுப்புக்கூறல், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பங்கீடு ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை இச்சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles