ஊழல்: குருணாகல் பிரதி மேயரின் கட்சி உறுப்புரிடையை இடைநிறுத்தியது ரிஷாட் கட்சி!

குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஸாருடீன் மெய்னுடீனின் கட்சி உறுப்புரிமை உடனுக்குக்கு அமுலுக்குவரும் வகையில் இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் சட்டவிவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி றுஷ்டி ஹபீப் அறிவித்துள்ளார்.

குருணாகல் மாநகர சபையின் ஒப்பந்த செயல்முறை தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய செயல்முறையுடன் தொடர்புபட்டு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), ஊழலுக்கும் சட்டத்தின் ஆட்சியை பாதிக்கும் எந்தவொரு நடத்தைக்கும் எதிராக உறுதியான மற்றும் சமரசமற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.

பொது நம்பிக்கையை சீர்குலைக்கும் அல்லது நாம் நிலைநிறுத்தும் நேர்மை மற்றும் பொறுப்புணர்வு கொள்கைகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்தச் செயலையும் கட்சி அனுமதிப்பதில்லை.

நடைபெற்று வரும் விசாரணைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறக்கூடிய சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்த இடைநீக்கம் அமுலில் இருக்கும். சட்டம் எந்தத் தலையீடும் இன்றி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் கட்சி நம்பிக்கை கொள்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கிறது.

குறிப்பிடப்பட்ட நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் அவருடைய தனிப்பட்ட செயல்களாகும்; அவை கட்சியின் கொள்கைகள், விழுமியங்கள் அல்லது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பவை அல்ல என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

இந்த விவகாரத்தின் முன்னேற்றங்களை கட்சி தொடர்ந்து கவனித்து வருவதுடன், தனது அரசியலமைப்பும் ஒழுக்காற்று நடைமுறைகளும் ஏற்படுத்திய விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.” எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles