விஜய் முதல்வராக தேர்வானதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை ஊக்குவிக்க முதல்வர் விஜய் முயற்சித்து வருவதாகவும், நடிகர் அஜித் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப்பயணமாக முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
லண்டன் சென்றுள்ள அவர், இன்று(செப்.,12) நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டியை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து அஜித் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: தனது பரபரப்பான பணிகளுக்கு இடையே, என் அழைப்பின் பேரில், முதல்வர் விஜய் நேரம் ஒதுக்கி லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடரை துவக்கிவைக்க லண்டன் வந்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் திரைத்துறையில் சக நடிகர்களாக இருக்கிறோம். விஜய் முதல்வரானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
விளையாட்டு துறையை மேம்படுத்த அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிலும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரவேண்டும் என்பது என் விருப்பம். லண்டனில் நடப்பது போல, சென்னையிலும் போட்டிகள் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
