விஷ ஊசி செலுத்தியும் தப்பிய பெண்ணுக்கு மீண்டும் மரண தண்டனை?

விஷ ஊசி மூலம் கடந்த வாரம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட போது, இரண்டு தவணை மருந்துகளைச் செலுத்திய பிறகும் கிறிஸ்டா பைக் (Christa Pike) என்ற பெண் உயிர் பிழைத்துள்ளார்.

இருப்பினும், அவருக்கு மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்ற அமெரிக்கா டென்னசி மாநில அதிகாரிகள் முடிவு செய்ய வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நாஷ்வில்லில் கடந்த செப்டம்பர் 30 அன்று நடைபெற்ற இந்தத் மரணதண்டனை முயற்சியின் போது, 50 வயதான பைக்கிற்கு Christa Pike பென்டோபார்பிட்டால் (pentobarbital) என்ற அபாயகரமான மருந்து இரண்டு தவணைகளாகச் செலுத்தப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு அவர் சுயநினைவுடன் பேசுவதாக அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.

மரணதண்டனை விவரத் தகவல் மையத்தின் (Death Penalty Information Center) கூற்றுப்படி, விஷ ஊசி மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு உயிர் பிழைத்த முதல் நபர் இவராவார்.

1996-ஆம் ஆண்டு, தனது 18 வயதில் சக மாணவியான கொலீன் ஸ்லெம்மர் என்பவரைக் கொலை செய்த வழக்கில் பைக்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தவறான மரணதண்டனை முயற்சியைத் தொடர்ந்து, எங்கு தவறு நடந்தது என்பது குறித்து சுதந்திரமான விசாரணைக்கு டென்னசி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்ட் கரோலினா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் பால் ஏ லூகாஸ் கூறுகையில், இந்த விசாரணைக்குப் பிறகே “அடுத்து என்ன நடக்கும்” என்பது தீர்மானிக்கப்படும் என்றார்.

“விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியதில் சிக்கல்கள் இருப்பதை விசாரணை கண்டறிந்தால், அந்த நடைமுறைகளைச் சரிசெய்வதில் மாநில அரசு கவனம் செலுத்தலாம்.

அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றியும் மரணதண்டனை தோல்வியடைந்தால், அது விதிமுறைகளின் மீதே கேள்விகளை எழுப்பும்.

எது எப்படியாயினும், டென்னசி மாநிலம் மீண்டும் மரண தண்டனைகளைத் தொடங்குவதற்கு முன், கிறிஸ்டா பைக்கின் தோல்வியடைந்த மரணதண்டனை தொடர்பான சூழல்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறினார்.

இரண்டாவது முறை மரணதண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பு

மரணதண்டனையின் போது சரியாக என்ன தவறு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பைக்கிற்குச் செலுத்தப்பட்ட மருந்து அவரது ரத்த நாளங்களுக்குள் செல்லாமல் கையில் உள்ள திசுக்களுக்குள் சென்றுவிட்டதாக வல்லுநர்கள் ஊகிக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles