லிந்துலை அக்கரகந்தையிலிருந்து கதிர்காமம் பாதயாத்திரை பக்தி பரவசத்துடன் ஆரம்பம்

லிந்துலை, அக்கரகந்தை பகுதியிலிருந்து கதிர்காமம் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலத்தை நோக்கிய புனித பாதயாத்திரை இன்று (20) பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக ஆரம்பமானது.

அக்கரகந்தை ஸ்ரீ மாடசாமி கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகளைத் தொடர்ந்து, அடியார்கள் ‘அரோகரா’ கோஷங்களுடன் தங்களின் பாதயாத்திரையைத் தொடங்கினர்.

அக்கரகந்தை கதிர்காமம் புனித பாதயாத்திரைக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் புனிதப் பயணமானது, குருசாமி கணகரட்ணம் தலைமையில் புறப்பட்டுச் சென்றுள்ளது.

மலையகப் பகுதிகளிலிருந்து கதிர்காமக் கந்தனின் அருள் தேடிச் செல்லும் இந்த பாதயாத்திரையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவுள்ளனர்.

அக்கரகந்த பாக்கியராஜ்

Related Articles

Latest Articles