” தமிழ் முற்போக்கு கூட்டணியானது மலையக மக்களுக்காக உணர்வுப்பூர்வமாக சேவையாற்றியுள்ளது.” – என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” எமது மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே மலையகத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்ககூடியதாக இருக்கும். எனவே, இப்படியானவர்களுக்கு வாக்களிப்பதா அல்லது தேர்தல் காலத்தில் வந்து விளையாட்டு பொருட்களை வழங்குபவர்களுக்கும், எங்கள் அப்பா செய்யாதவற்றை நான் செய்வேன் எனக் கூறுபவர்களுக்கும் வாக்களிப்பதா என மக்கள் முடிவெடுக்கவேண்டும்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு நானும், ராதா அண்ணனுமே அமைச்சர்களாவோம். கடந்த நான்கரை வருடங்களில் நாம் இருவரும் மக்களுக்கு உணர்வுப்பூர்வமாக சேவைகளை செய்துள்ளோம். அவ்வாறு செய்துவிட்டே வாக்கு கேட்டுவந்துள்ளோம்.
எப்படிதான் சேவை செய்திருந்தாலும் நான் கட்டிய வீட்டை குருவிகூட என விமர்சிக்கின்றனர். நான் குருவிகூடாவது கட்டிக்கொடுத்தேன். அவர்கள் அதையாவது செய்தார்களா? ” – எனவும் திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.