கம்பளையில் விபத்து: வயோதிபர் பலி

கம்பளை, சிங்ஹாப்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிங்கப்பிட்டிய பகுதியில் பாதசாரிகள் பாதையில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த நபரொருவர், கால் தவறி விழுந்துள்ளார்.

பிரதான வீதியில் விழுந்த அவரின் தலை பகுதியில் அவ்வழியாகச் சென்ற லொறியொன்றின் பின்புற சக்கரத்தின் சிக்கியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

லொறியின் பின்புற சக்கரத்தில் தலை நசுங்கியதில், 65 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க. யோகா

Related Articles

Latest Articles