பசறையில் வாகனம் மோதி முதியவர் படுகாயம்!

பசறை கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பசறை தபால் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சுமார் 75 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

பசறை நகரில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த ‘டபுள் கெப்’ (Double Cab) ரக வாகனம் ஒன்று, எரிபொருள் நிரப்புவதற்காகச் வீதி ஓரமாக அமைந்திருந்த எரிபொருள் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளது.

இதன்போது, வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த முதியவர் மீது வாகனம் மோதியுள்ளதுடன், அவரது காலின் மீதும் வாகனத்தின் சக்கரம் ஏறியுள்ளது.

விபத்தில் காயமடைந்த முதியவரை, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு முச்சக்கரவண்டி மூலம் பசறை வைத்தியசாலையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

த. டிமேஷன்

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles