வீதிப் புனரமைப்பைக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் பாரிய போராட்டம்!

நமுனுகுலையிலிருந்து மியனகந்துர வரையிலான சுமார் 15 கிலோமீட்டர் தூர வீதியில், 5 கிலோமீட்டர் பகுதி நீண்டகாலமாக குன்றும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, தோட்டத் தொழிலாளர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

படால்கும்பர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தன்னக்கும்புர, மாதுளாவத்தை, பூட்டாவத்தை, தேவத்தன்ன, தன்னக்கும்புர மேற்பிரிவு ஆகிய தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இச் சீரற்ற வீதியால் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக அவர்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர்:

கல்வி பாதிப்பு:

கோணக்கலை, நியூபோக் மற்றும் கனவரல்ல ஆகிய தமிழ் வித்தியாலயங்களுக்குச் செல்லும் மாணவர்கள் நாள்தோறும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கர்ப்பிணித் தாய்மார்களை அவசரத் தேவைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதில் பாரிய சிக்கல்கள் உள்ளன. சில நேரங்களில் உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாததால் உயிரிழப்புகள் கூட நிகழ்ந்துள்ளதாக ஊர்மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

தமது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொழிலுக்குச் செல்லாது தன்னக்கும்புர பாடசாலைக்கு அருகாமையில் ஒன்று திரண்ட மக்கள், அங்கிருந்து பேரணியாக நமுனுகுலை நகர் நோக்கி நகர்ந்தனர். கறுப்புக் கொடிகளையும் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியவாறு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் அவர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில், தோட்ட மக்களின் நியாயமான போராட்டத்தைக் கண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரும் அவர்களுடன் இணைந்து வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

போக்குவரத்துத் தடை மற்றும் தீர்வு:

ஆர்ப்பாட்டக்காரர்கள் நமுனுகுலை நகரில் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பசறையிலிருந்து பண்டாரவளை செல்லும் வீதியூடான போக்குவரத்து சுமார் 5 மணிநேரம் ஸ்தம்பித்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஊவா மாகாண ஆளுநருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தைப் பெற்றுக்கொள்ள ஆளுநரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

R.Tபசறை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles