மஸ்கெலியா மோகினி எல்ல விபத்து: இருவர் பலி!

மோகினி எல்ல விபத்து: இருவர் பலி!
மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியல் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஐவரில் இரு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த இரு சிறுவர்களும், ஆட்டோ ஓட்டுநரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
………

முதலாம் கட்ட இணைப்பு

மஸ்கெலியா – நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று (22) காலை ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்தஆட்டோவில் சாரதி உட்பட ஐவர் பயணித்துள்ளதுடன், விபத்தில் அனைவரும் காயமடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் சிலர் மேலதிக சிகிச்சைக்காகக் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Related Articles

Latest Articles