இலங்கை வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது.
ஈரானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையிலும், உள்ளூரில் வான்வழி நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையிலும், வெளிநாட்டு விமானங்கள் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.
இதனை நிராகரித்துள்ள இலங்கை விமானப்படை , உள்ளூரில் விமான இயக்கங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு , ஏற்கனவே திட்டமிடப்பட்ட உள்நாட்டு ஒத்திகைகளின் ஒரு பகுதி என்று, கூறியுள்ளது.
விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் மார்ச் 2ஆம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெறும் முக்கிய விமானப்படை நாள் அணிவகுப்புடன் தொடங்கும்.
மார்ச் 6 முதல் 8 ஆம் திகதிவரை இரத்மலானை விமானப்படை தளத்தில் ஒரு பொது விமான கண்காட்சி நடைபெறவுள்ளது.
