2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தன.
இதனைத் தொடர்ந்து, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் 25 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு மற்றும் புள்ளிப் பட்டியலிடல் உள்ளிட்ட ஏனைய அனைத்து மதிப்பீட்டு நடைமுறைகளும் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து, ஒரு மாத காலத்திற்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.










