play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்!

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி ஆரம்பமாகும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 9 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் play-off சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும்.

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் முழுமை பெற்ற அணிகளில் ஒன்றாகக் காட்சியளிக்கிறது.

தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அந்த அணி 16 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

12 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 8 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெறும் பட்சத்தில் 18 புள்ளிகளுடன் play-off சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

Related Articles

Latest Articles