ஹட்டன் பிரகடனம் முழுமையாக அமுல்படுத்தப்படும்!

“மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர தெரிவித்தார்.

மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ஹட்டன் பிரகடனம் ஊடாக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற ஆரம்பித்துள்ளோம். முதல் எழுத்து முதல் இறுதி எழுத்துவரை கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு நிச்சயம் நாம் பொறுப்பு கூறவேண்டும்.

மலையக மக்களின் எதிர்காலத்துக்காக நாம் வழங்கிய உறுதிமொழிகள் குறித்து சந்தேகம்கொள்ள வேண்டாம். அனைத்தையும் நாம் செய்வோம்.” எனவும் மஞ்சுள சுரவீர குறிப்பிட்டார்.

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு நுவரெலியா மாவட்ட எதிரணி எம்.பிக்கள் ஏன் வருவதில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

Latest Articles