பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பசறை, ஹாலி-எல, லுணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாக பெய்ததன் காரணமாக சில பகுதிகளில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் பல பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
மேலும், மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளை பசறை, பதுளை, ஹாலி-எல, லுணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் மழை பதிவாகியுள்ளது.
பதுளை பிராந்திய செய்தியாளர்-
இராஜரத்தினம் சுரேஷ்குமார் /
