ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் போர்நிறுத்தம் முறையாகப் பின்பற்றப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தை குறித்து எந்தவிதமான அழுத்தமும் தமக்கு இல்லை என்பதை டிரம்ப் இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
