“image expo 2023” கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

CameraLK நிறுவனத்தினால் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “image expo 2023” கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) பார்வையிட்டார்.                                                                                                         

“image expo 2023” வின் ஊடாக உலகின் முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான அனுபவங்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளவும், தொழில் மற்றும் வினோத அம்சங்கள் சார்ந்த புகைப்படம் மற்றும் காணொலியாக்க வாய்ப்புக்களும் கிடைக்கும்.

இதன்போது சோனி நிறுவனத்தின் முகவர்களான புகைப்பட கலைஞர் திமிதி குரூஸ் மற்றும், திலின கழுதொட்டகே ஆகியோருக்கு ஜனாதிபதியால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.                                                                                                         

அதனையடுத்து விருதுபெற்ற வனத்துறைசார் புகைப்பட கலைஞரான லக்‌ஷித கருணாரத்னவால் துறைசார் புகைப்பட தொகுப்பொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கு வழங்கி வைக்கப்பட்டது.

பின்னர் CameraLK நிறுவனம் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் கெமரா ஒன்றை அன்பளிப்புச் செய்தது.

“image expo 2023” கண்காட்சி நேற்றைய தினம் ஆரம்பமாகியிருந்த நிலையில் நாளை (15) நிறைவடைய உள்ளது.

CameraLK நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுஷ்க குணசிங்க, சோனி நிறுவனத்தின் பிராந்திய அபிவிருத்தி மத்தியஸ்தானித்தின் விற்பனைப் பிரதானி ஸ்டெனில் டேன் (Stanliy Tan), வர்த்தக பிரதானி யெப் யெங் (Yap yung), DJ I சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் (Fly Chang), அதன் பிரதிநிதி பீத் சிங், உலகின் முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles