IMF அமுலாக்க தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க சு.க. முடிவு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நல்லாட்சியின்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் இணைந்து செயற்பட்டோம். மேற்படி அமைப்பால் நிபந்தனைகள் முன்வைக்கப்படலாம். அனைத்தையும் நாம் ஏற்க வேண்டும் என்றில்லை. அந்த அமைப்புடன் பேச்சு நடத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் நிதி நாட்டுக்கு அவசியம். அதற்கு தேவையான ஆதரவை எமது கட்சி வழங்கும்.” – என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles