IMF ஐ நாடுவதா, இல்லையா? 03 ஆம் திகதி இறுதி முடிவு!

” நிதி நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.” – என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது வேறு நாடுகளிடம் கடன்பெறுவதா என்பது தொடர்பில் அவர்கள் தெளிவுபடுத்துவார்கள். நிதி அமைச்சரும் தமது உறுதியான நிலைப்பாட்டை அறிவிப்பார். அதன்பின்னர் அமைச்சரவையால் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.” – என்றார்.

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles