விரைவில் இலங்கை வருகிறது IMF குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் குழு கொழும்பு வரவுள்ளது.

இந்த வருகையின் போது, ​​அவர்கள் ஏழாவது ஆய்வை நடத்துவதோடு, எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர்.

இந்த ஆய்வில் திருப்தியடைந்தால், இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சர்வதேச நாணய நிதியம் விடுவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles