IMF கடன் – ஆளுங்கட்சியினர் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு கடன் அனுமதி கிட்டியுள்ள நிலையில், ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது என அரசு இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையிலேயே ஹட்டன், பதுளை, கொழும்பு, காலி உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

Related Articles

Latest Articles