“மஸ்கெலியா, பொகவந்தலாவை வைத்தியசாலைப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு”

மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி, நாடாளுமன்றத்தில் வெளிகொணர்ந்ததை அடுத்து, பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்துள்ளார்.

மஸ்கெலிய வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களை பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரம் இல்லாமை மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் உள்ளிட்ட ஊழியர் பற்றாக்குறை தொடர்பில் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்றத்தில் இன்று (20) கருத்து வெளியிட்டிருந்தார்.

ஜீவன் தொண்டமானின் உரை நிறைவடைந்ததை அடுத்து, சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, தொலைபேசியின் ஊடாக ஜீவன் தொண்டமானை தொடர்புக் கொண்டு, குறித்த வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து முழுமையான தகவல்களை கேட்டறிந்துக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தொலைபேசியூடாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியையும், ஜீவன் தொண்டமானையும் நேரடியாக கலந்துரையாட இணைப்புக்கு எடுத்துள்ளார்.

இதன்போது, மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் மூவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கர்ப்பணித் தாய்மார்களை பரிசோதிக்கும் ஸ்கேன் இயந்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனிக்கு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், பொகவந்தலாவை வைத்தியசாலையில் காணப்படும் மருத்துவர் உள்ளிட்ட ஊழியர் பற்றாக்குறை தொடர்பில் ஆராய்ந்து, உடனடி தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க உடனடியாக தீர்வு வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ள பின்னணியிலேயே, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியை, அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தொலைபேசியூடான கலந்துரையாடலில் இணைந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மலையக மக்கள் எதிர்நோக்கிவரும் காணி, வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

அத்துடன், மலையக பகுதிகளில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை, தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அரசியல்வாதிகள் இடையூறு விளைவித்தமை தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனத்திற்கு ஜீவன் தொண்டமான் கொண்டு வந்திருந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles