ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு வந்த 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் இதுவரை தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
ஈரான் விமானப்படை தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ட்ரோன்களை தாக்கி அழிப்பதற்கு உள்நாட்டு தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
நவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்க ஈரானிய படையினர் புதுமையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாராக இருக்கின்றனர் எனவும் ஈரான் விமானப்படை தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய போர் உத்திகள் எதிரி நாடுகளுக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா எல்ஹாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய வான் எல்லைக்குள் நுழையும் எந்தவொரு நவீன அச்சுறுத்தலையும் முறியடிக்கத் தேவையான தொழில்நுட்ப வலிமை அந்நாட்டிடம் இருக்கின்றது என சில போர் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.










