கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலா?

கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவா என்பதை தற்போதே கூறிவிடமுடியாது. எது எப்படி இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் நான் நிற்பேன் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு ,

“எதிரணியால் முன்னெடுக்கப்படும் கூட்டு நடவடிக்கைகளில் நான் நிச்சயம் பங்கேற்பேன். எனக்கு நபர்கள் முக்கியம் கிடையாது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. எனவே, சரியான நேரத்தில் நான் சரியான இடத்தில் நிற்பேன்.

ரணிலுடன் நான் வெளியில் இறங்கினேன். அந்த முடிவு சரி என்பதை இன்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கூறிவருகின்றேன்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பொறுத்தே, ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்தக்கட்ட அரசியல் பற்றி தீர்மானிக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு நாடாளுமன்றம் வரும் எண்ணம் இல்லை.” என்றார் ராஜித.

Related Articles

Latest Articles