நுவரெலியாவில் சீதையம்மனை வழிபட்டார் ஜப்பான் தூதுவர்

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்குச் விஜயம் செய்த இலங்கைகான ஜப்பான் தூதுவர் அகிடோ இசமாதோ (Akito Isomato), இன்று (18.09.2026) பிற்பகல் 3.00 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

ஆலயத்திற்கு வருகை தந்த தூதுவரை, ஆலய அறங்காவலர் சபையின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கிப் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பங்கேற்ற தூதுவருக்கு, ஆலயத்தின் சார்பில் உப பொருளாளர் ஆர். குணசேகரனால் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆலயத்தின் சிறப்பு விருந்தினர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் ஜப்பான் தூதுவர் தனது வருகை குறித்த பதிவைப் பதிவு செய்தார். மேலும், ஆலயத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ள முப்பரிமாண (3D) ‘புஷ்பக விமான’க் காட்சிகளையும் அவர் பார்வையிட்டார்.

நுவரெலியா  நிருபர் எஸ்.தியாகு

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles