இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்வின்பூதவுடலுக்கு இன்று(20) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும், அமைதியான, பணிவான, கடமையுணர்வுமிக்க அதிகாரியாக அவர் நாட்டிற்கு கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர் என்ற நினைவு என்றும் நிலைத்திருக்கும் என்று ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
மேலும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கை காவல்துறையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த ஜீவன் தொண்டமான், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
