பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தமது பதவியிலிருந்தும், தொழிலாளர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவை அவர் மன்னரிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதோடு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அட்டவணையை வெளியிடுமாறு கட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளார்.
ஜூலை 9 முதல் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் கோடைகால விடுமுறைக்குள் புதிய தலைமை உறுதி செய்யப்படும்.
அதுவரை நாட்டின் பிரதமராக ஸ்டார்மர் தொடர்ந்து பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.










