KKS – காரைக்கால் கப்பல் சேவை எப்போது ஆரம்பமாகும்?

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சில அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தவுடன், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

எனினும், காங்கேசன்துறையிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இம்மாதம் நடுப்பகுதியில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஒரு வழி போக்குவரத்திற்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

65 கடல் மைல் தூரம் கொண்ட இந்த பயணத்திற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கு காரைக்காலில் பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளதுடன், மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் மாலை 6 மணிக்கு காரைக்காலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles