மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வலா கங்கை பானதுகம பிரதேசத்திலும் அத்தனகலு ஓயா டுனாமலே பிரதேசத்திலும் வெள்ள அபாய மட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தெதுரு ஓயா, லுணுகம்வெஹெர, வெஹெரகல உள்ளிட்ட 16 பாரிய நீர்த்தேக்கங்களும் 18 நடுத்தர நீர்த்தேக்கங்களும் வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பதுளை, கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles