ஜூன் மாதத்தில் மட்டும் வாகன இறக்குமதிக்கு 182 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, 2026 ஜூன் மாதத்தில் மோட்டார் வாகன இறக்குமதிக்கான இலங்கையின் செலவினம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 27.1% குறைந்து 182 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) அண்மைய வெளிநாட்டுத் துறை செயல்பாடு குறித்த அறிக்கையின்படி, தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் ஆகிய இரண்டின் இறக்குமதியிலும் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் இந்த மந்தநிலை ஏற்பட்டபோதிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வாகன இறக்குமதிக்காகச் செய்யப்பட்ட மொத்தச் செலவு 1.25 பில்லியன் அமெரிக்க டொலராகும்.

இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பதிவான 1.57 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ஒரு குறிப்பிடத்தக்கக் குறைவாகும்.

Related Articles

Latest Articles