சிங்கமும், புலியும் ஒருபோதும் மோதிக்கொள்ளாது. இந்த கோட்பாடு நரிக்கு பொருந்தாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்தார்.
சிங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நரிக்கு ஓடுவதற்கு இடம் இருக்காது எனவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று தனது 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
இதனை முன்னிட்டு அவரது இல்லத்தில் விசேட கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்கான ஜி.எல்.பீரிஸ், ராஜித சேனாரத்ன மற்றும் களுத்துறை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.
அர்ச்சுனா எம்.பியும் ரோஹிதவின் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கு கேக் ஊட்டி, பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அர்ச்சுனா இவ்வாறு குறிப்பிட்டார்.










