மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி: மதுபானங்களின் விலைகள் உயர்வு

இலங்கையிலுள்ள பல மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சாராயம் (Arrack) மற்றும் ஏனைய மதுபானங்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் செலவு உள்ளிட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகம் விற்பனையாகும் சாராயம் ((கல் அரக்) 750 மில்லி லீட்டர் போத்தலின் விலை 20 ரூபாவினாலும், அரை போத்தலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், Old Arrack போத்தல் ஒன்றின் விலை 50 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இவற்றுடன், விஸ்கி (Whisky) மற்றும் பிராந்தி (Brandy) போத்தல்களின் விலைகள் 100 ரூபாவினால் அதிகரிப்பைச் சந்தித்துள்ளன.

ஏனைய மதுபான வகைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும், பியர் (Beer) விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

Latest Articles