LPL தொடர் – வெற்றிக்கனியை ருசித்தது ஜப்னா அணி!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை ஜப்னா ஸ்ராலியன்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.

லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா ஸ்ராலியன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. இதன்படி களமிறங்கிய அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஜப்னா அணி சார்பாக  சொயிப் மலிக் 46 ஓட்டங்களையும் திஸர பெரேரா 14 பந்துகளுக்கு 39 ஓட்டங்களையும், தனஞ்சடி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றனர். லக்‌ஷான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

189 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 135  ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.  இதன்படி 53 ஓட்டங்களால் ஜப்னா அணி வெற்றிபெற்றது.

அணிசார்பாக, அணித் தலைவர் பானுக ராஜபக்ச 40 ஓட்டங்களையும், அஸாம் கான் 36 ஓட்டங்களையும் பெற்றனர். முதல் 3 விக்கெட்டுகளும் 7 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது. சிறப்பான ஆரம்பம் இன்மையாலேயே தோல்வியை நோக்கி நகரவேண்டிய நிலை காலி அணிக்கு ஏற்பட்டது.

உஷ்மான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹசராங்கவும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் பந்துவீசி 18 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles