தலவாக்கலை – மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹப்புத்தளை, ஹல்தமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சவரியார் பிரான்சிஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கௌசல்யா










