லுணுகலை பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிவுலேகம பகுதியில் ஒருவர் கட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக லுணுகலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் குறித்த பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபரை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் லுணுகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

த.டிமேஷன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles