ஆட்ட நாயகன்!

ஐ.பி.எல். போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 78 ஓட்டங்கள் விளாசித்தள்ளினார்.

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 16 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் தலைவர் ரியான் பராக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 201 என்ற இலக்கை எட்டியது.
துருவ் ஜூரல் 43 பந்துகளில் 81 ஓட்டங்களைப்பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, ராஜஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே 202 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.

விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

Related Articles

Latest Articles